திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.1,46,228/- அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ரூ.89,230/- சுயநிதி மருத்துவ கல்லூரியில் ரூ.8,42,000/- மற்றும் சுயநிதி பல்மருத்துவ கல்லூரி ரூ.4,98,000/ அரசாணை எண்.496, நாள்.30.11.2020. | 1. மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2.மாணவர் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் பயின்று இருக்க வேண்டும். 3. மாணவர் தமிழ்நாட்டை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும். | 1. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். 2. இருப்பிட சான்று 3. நீட் மதிப்பெண் பட்டியல் 4. நீட் நுழைவு சீட்டு 5. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 6. 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 7.12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 8. மாற்றுச் சான்றிதழ் 9. சாதி சான்றிதழ் 10. அரசு பள்ளியில் பயின்றதற்கான மெய்த்தன்மை சான்று | இணைய வழியாக
www.tnmedicalselection.org
www.tnmedicalselection.net
| துணை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், கீழ்ப்பாக்கம், சென்னை -10. | இயக்குநர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், 162, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10. தொலைபேசி எண். 044-28366890, 044-28364822 இணையதளம் www.tnhealth.tn.gov.in
|