திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்கள் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயண திட்டம்.
அரசாணைஎண்: 238 தேதி,13.07.2007, அரசாணை எண்: 57 தேதி, 05.04.2010. அரசாணை எண்: 17 தேதி, 31.01.2014. அரசாணை எண்: 246 தேதி,09.10.2013.
2023-24 ஆம் நிதியாண்டில் அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், தனியார் கல்லுரிகள், ஐ.டி.ஐ , மற்றும் கலை கல்லூரிக்கு என மொத்தம் 1500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கால அளவு- ஒரு வருடம்
*(அனைத்து விதமான சலுகைகளும் குளிர்சாதன பேருந்து மற்றும் படுக்கை வசதி பேருந்துகளுக்கு பொருந்தாது )
| அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி .அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சமுதாயக் கல்லூரி மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு கட்டணமில்லா பயண சலுகை. | அரசு கல்லூரி முதல்வர் அவர்களால் சான்றொப்பமிட்ட புகைப்படத்துடன் பயணம் செய்யும் தட விவரத்துடன் கூடிய விண்ணப்பம். | புகைப்படத்துடன் பயணம் செய்யும் தட விவரத்துடன் கூடிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அரசு கல்லூரி முதல்வர் மூலம் நேரடியாக போக்குவரத்துக் கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
( SETC தவிர்த்து அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளுக்கும், நகரப் பேருந்துகள் இல்லாத வழித்தடத்தில் புறநகர் பேருந்துகளுக்கும் பொருந்தும் ) | உதவி / துணை மேலாளர் ( வணிகம்) மா.போ.க (சென்னை)லிட்., சென்னை. 9445030523 | மேலாண் இயக்குனர், மா.போ.க (சென்னை) லிட்., தொலைபேசி 044-23455801 www.mtcbus.tn.gov.in |