திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை
இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள இளநிலை கலைமற்றும் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ஆண்டிற்கு ரூ. 12,000மும் டிப்ளமோ மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ. 10,000மும் கீழ்காணும் அரசாணைப்படி வழங்கப்படுகிறது. (அரசாணை எண்.897, பொது (ம.வா.2)த் துறை, நாள் 23.10.2021)
| இளநிலை தொழில் படிப்பு / டிப்ளமோ பயில்பவராக இருக்க வேண்டும் | 1.கல்வி உதவித் தொகை விண்ணப்படிவம் 2.கல்லூரி முதல்வரிடமிருந்து பெறப்பட்ட கல்வி பயில்வதை உறுதிப்படுத்தும் சான்று (Bonafide Certificate) 3. படிப்பு (Courses) விபரத்தை தெரிவிக்கும் வட்டாட்சியர் சான்று 4.மாணவர் கையில் உள்ள வங்கி கணக்கு எண் மற்றும் IFSC கோடு விவரம் காட்டும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம். | முகாம்களில் உள்ள மாணவர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தில் தங்கள் பெயர், பெற்றோர் பெயர், குடும்ப அடையாள அட்டையின் படிப்பு, படிப்பு காலம், கல்வி பயிலும் நிறுவனம்/ கல்லூரி பெயர், வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் முகாம் வட்டாட்சியருக்கு நேரடியாக விண்ணப்பம் செய்து முகாம் வட்டாட்சியர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டு, மாவட்ட ஆட்சியர் மூலம் ஆணையரகம் வரப்பெற்று கல்வி உதவி தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. | மாவட்ட ஆட்சித் தலைவர்/ தனித்துணை ஆட்சியர் (முகாம்) | அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை-5. தொலை பேசி எண்.044-28515288, மின்னஞ்சல் முகவரி: rehabsl2013@ gmail.com |