திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
கல்விக்கடன்
சிறுபான்மை மாணவ/மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகள் பயிலும் சிறுபான்மையினர் மாணவ மாணவியர்களுக்கு கல்விக் கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
திட்டம் - I இந்தியாவில் கல்வி பயில கல்விக் கடன் ஆண்டு தோறும் ரூ.4.00 இலட்சம் வீதம் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு ரூ.20.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. மேலும், வெளி நாடுகளில் "தொழிற் கல்வி பயில ஆண்டிற்கு ரூ.6 இலட்சம் வீதம் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு ரூ 30.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. வட்டி விகிதம்-ஆண்டொன்றுக்கு 3% திட்டம் – II இந்தியாவில் கல்வி பயில ஆண்டு தோறும் ரூ4.00 இலட்சம் வீதம் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு ரூ.20.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.
மேலும், வெளிநாடுகளில் கல்வி பயில்பவர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்குரூ.6.00 இலட்சம் வீதம் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு ரூ.30.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.
வட்டிவிகிதம் ஆண்டிற்கு ஆண் பயனாளிகளுக்கு-ஆண்டொன்றுக்கு 8% பெண் பயனாளிகளுக்கு-ஆண்டொன்றுக்கு 5% மேற்படி கல்விக் கடனில், சேர்க்கை கட்டணம் / பயிற்றுவிப்பு கட்டணம், புத்தகம், எழுது பொருள் மற்றும் படிப்புக்குத் தேவையான உபகரணங்கள், தேர்வுக் கட்டணம், விடுதி மற்றும் உணவுக் கட்டணம் (விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு மட்டும்) ஆகியவை அடங்கும்.
கல்விக் கடன் புதுப்பித்தல்:- கல்விகடன் பெற்ற பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மாணவ / மாணவியர் பருவ தேர்வுகளில் / தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பின் புதுப்பித்தல் கல்விக் கடன் வழங்கப்படும்.
கல்வி பருவகாலம் முடிந்த தேதியிலிருந்து, அடுத்து 6-வது மாதத்திலிருந்து அல்லது பணியில் அமர்ந்த தேதியிலிருந்து இதில் எது முந்தையதோ அந்த தேதியிலிருந்து அசல் மற்றும் வட்டித்தொகை ஆகியவை 60 மாதத் தவணைகளில் வசூலிக்கப்படும்
| விண்ணப்பதாரர் சிறுபான்மையினரான இனத்தவரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள், ஜெயினர்கள் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.
திட்டம் – I ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ. 98,000/-க்கு மிகாமலும், நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் – II திட்டம் -I இன் கீழ் நன்மைகளைப் பெற முடியாத நபர்கள் மற்றும் ரூ.8,00,000/- வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் (கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு
வயதுவரம்பு:- விண்ணப்பதாரர் சிறுபான்மையினரான இனத்தவரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள், ஜெயினர்கள் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.
திட்டம் – I ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ. 98,000/-க்கு மிகாமலும், நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். | விண்ணப்பிப்பதற்கான ஆவணங்கள்: 1.சாதிசான்றிதழ்/ பள்ளிமாற்றுசான்றிதழ்நகல்/ ஜெயின் சிறுபான்மையினர் மதச்சான்றிதழ். 2.வருமானசான்றிதழ் நகல் 3.இருப்பிடசான்றிதழ்நகல் 4.உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) அசல் 5.கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது-அசல் (Original) 6.மதிப்பெண் சான்றிதழ்நகல் 7.வங்கி கோரும் இதர ஆவணங்கள் | மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகம் மற்றும் மண்டல கூட்டுறவு சங்கம் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மைகூட்டுறவு வங்கி. ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் நேரடியாக விண்ணப்பிக்கவேண்டும். | சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியலும் (அல்லது ) மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (அல்லது) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. | மாவட்ட பிற அலுவலர் மாவட்ட ஆட்சியர் வளாகம் 1.சென்னை 044-25241002 2.காஞ்சிபுரம் 044-27236588 3. செங்கல் பட்டு 4. திருவள் ளுர் 044-27661888
5. வேலூர் 0416-2253012 6. இராணிப் பேட்டை 7. திருப் பத்தூர் 8. திரு வண்ணாலை 4175/232206 9. கடலூர் 04142-230495 10. விழுப்புரம் 4146/223264/222011 11. கள்ளக் குறிச்சி 12 தஞ்சாவூர் 04362-278415 13. நாகப் பட்டினம் 04365-251562 14. மயிலாடு துறை
15. திருவாருர் 04366-220519 16. திருச்சி 0431-2401860 17. கருர் 04324-255305 18. அரியலூர் 04329-28055/ 228225 19. பெரம் பலூர் 04328-224465 20. புதுக் கோட்டை 04322-227555 21. மதுரை 0452-25290 22. தேனி 04546-254960
23. திண்டுக் கல் 0451-2432133/ 246108 24. இராம நாதபுரம் 04567-231288 25. விருதுநகர் 04562-252709 26. சிவ கங்கை 04575-245008 27. திருநெல் வேலி 0462-2500141 28. தென்காசி 29. தூத்துக் குடி 0461-2341378 30. கன்னியா குமரி 04652-236729 31. சேலம் 0427-2451333 32. நாமக்கல் 04286-280193 33. தருமபுரி 04342-231861 34. கிருஷ்ண கிரி 04343-235656 35. கோயம் புத்தூர் 0422-2301523 36 திருப்பூர் 0421-2971130 37. ஈரோடு 0424-2260255 38. நீலகீரி 0423-2440340 |