திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
விபத்துக் காப்பீட்டுத் திட்டம்
(Bread winning) வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளுக்கு. ரூ.75000 வழங்கப்படும். (அரசாணை (நிலை)எண்.195 பள்ளிக் கல்வி(பக5(2) துறை, நாள் 27.11.2014) | வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகள். | தாய்/தந்தை இறப்புச் சான்று, வாரிசுச் சான்று, முதல் தகவல் அறிக்கை(FIR), உரிய விண்ணப்பம் | பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக விண்ணப்பித்து மாவட்ட முதமைக் கல்வி அலுவலரின் பரிந்துரையின் பேரில் நேரடியாக தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாடு நிறுவன பொது மேலாளர். | இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) | இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், DPI வளாகம், சென்னை-600 006 044-28278901 jdnsed@nic.in
|
விபத்துக் காப்பீட்டுத் திட்டம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ/ மாணவியர்கள் பள்ளிகளிலும்/ பள்ளி செல்லும் போது / சுற்றுலா செல்லும் போது / பள்ளியின் செயல்பாடுகளின் போதும் / எதிர்பாராத விதமாக, விபத்துக்களினால் மரணம்/ காயம் ஏற்பட்டால் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரணநிதியில் இருந்து உதவித்தொகைபெற்று வழங்கப்படும் (அ) இறப்பு; ரூ.1,00,000/- (ஆ) பலத்தகாயம்: ரூ.50,000/- (இ)சிறிய காயம்: ரூ.25,000/- (அரசாணை(நிலை)எண்.17 பள்ளிக் கல்வி(பக5(2) துறை, நாள் 07.02.2018)
| அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைகல்வி கற்கும் மாணவ/ மாணவியர்கள் பள்ளிகளிலும்/ பள்ளி செல்லும் போது / சுற்றுலா செல்லும் போது / பள்ளியின் செயல்பாடுகளின் போதும் / எதிர்பாராத விதமாக, விபத்துக்களினால் மரணம்/ காயம் ஏற்பட்டால் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு. | 1. இறப்புச் சான்று 2. வாரிசு சான்று 3. முதல் தகவல் அறிக்கை | மாணவ/ மாணவியர் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் விண்ணப்பித்தல் வேண்டும். | இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) | இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், DPI வளாகம், சென்னை-600 006 044-28278901 jdnsed@nic.in
|