திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய முகவர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் சிறுசேமிப்பு திட்டமான SAS & MPKBY திட்டத்தில் அதிகவசூல் செய்யும் முகவர்களுக்கு வசூலின் அடிப்படையில் மாவட்டஅளவில் மண்டல உதவி இயக்குநர்/ மாவட்டஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (சிசே) பிரிவு மூலமாகவும் மாநில அளவிலும் ஆணையர், சிறுசேமிப்புத்துறை மூலமாகவும் தேர்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இதற்காகஆண்டுதோறும் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்தஆண்டும் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய முகவர்களுக்கு பரிசுகள் வழங்குவதற்காகஅரசாணை (வாலாயம்) எண். 339, நிதி (சிறுசேமிப்பு)த் துறை, நாள் 27.10.2022 ன்படி ரூ.9,68,000/- அரசால் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டது | சிறுசேமிப்பு முகவர்கள் | அஞ்சலகத்திலிருந்து பெறப்பட்ட ஆண்டு வசூல் அறிக்கை | நேரடியாக கீழ்கண்ட அலுவலர்கள் மூலமாக: மாவட்டங்களில்: 1.மாவட்டஆட்சியர், 2.மாவட்டஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (சிசே) / மண்டல உதவி இயக்குநர் (சிசே) மற்றும் சென்னையில்: 1.உதவி இயக்குநர் (சிசே) சென்னை மாநகராட்சி மூலமாக | மாவட்டங் களில்: 1.மாவட்டஆட்சியர், 2.மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிசே) / மண்டல உதவி இயக்குநர் (சிசே) மற்றும் சென்னையில்: 1. உதவி இயக்குநர் (சிசே) சென்னை மாநகராட்சி | ஆணையர், சிறுசேமிப்புத்துறை பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை, 5ஆம் தளம், 571 நந்தனம் சென்னை - 600 035 044 -28527486 |
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
உலக சிக்கன நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டத்திலும் சிறுசேமிப்பு குறித்த போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம் சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை மாணவர்களிடையே உணர்த்திடும் பொருட்டும், பள்ளி மாணவ / மாணவியர்களிடையேபல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டமாணவ / மாணவியர்களுக்கு உலகசிக்கன நாளான அக்டோபர் மாதம் 30ம் நாள் மாவட்டஆட்சியர் மூலமாகபரிசுகள் வழங்கப்படும் மேலும் விழாசெலவினம் மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்டம் ஒன்றிற்கு தலா ரூ.10,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்படும் கடந்தஆண்டும் (அரசாணை (வாலாயம்) எண். 759, நிதி (சிறுசேமிப்பு)த் துறை, நாள் 26.09.2022. ன்படி ரூ.3,10,000/- நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டது.) (அரசாணை (வாலாயம்) எண்.759, நிதித்(சிறுசேமிப்புத்) துறை, நாள்.26.09.2022) | 6th முதல் 12th வகுப்புவரை படிக்கும் மாணவ / மாணவியர்கள் | நடத்தப்பட்ட போட்டிகளின் பள்ளி தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற்ற ஸ்கிரிப்ட் நகல் (Script Copy) | 1. முதன்மை கணக்கு அலுவலர் 2. மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் /மண்டல உதவி இயக்குநர் (சிசே) மற்றும் உதவி இயக்குநர் சென்னை மாநகராட்சி மூலமாக | பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் | ஆணையர், சிறுசேமிப்புத்துறை பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை, 5ஆம் தளம், 571 நந்தனம் சென்னை - 600 035 044 -28527486 |