திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
நலிந்து வாழும் சிறந்த வயோதிக கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டம்
நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி நபர் ஒருவருக்கு மாதந்தோறும் ரூ. 3,000/- (அரசாணை(நிலை) எண்.230, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (பண்-2)த் துறை, நாள் 13.06.2023) ஆணைவெளியிடப்பட்டுள்ளது. | கலைஞர்கள் விண்ணப் பிக்கும் போது 58 வயது நிறைவு பெற்றவராக இருத்தல் வேண்டும். | 1) உரிய விண்ணப்பப் படிவம் 2) வயதிற்கான ஆதாரம் : (பிறப்புச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்) 3) தொடர்புடைய கலைப்புலமைக்கு சான்றிதழ்கள். 4) வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியரின் பரிந்துரைச் சான்று. 5) வருமான உச்சவரம்பு ரூ.72,000/-த்திற்குள் இருத்தல் வேண்டும். 6) தொடர்புடைய கலையில் உள்ள வல்லுநர்கள் இருவரின் பரிந்துரை. | துறையால் வரையறுக்கப்பட்ட முறையான விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலும் அல்லது உதவி இயக்குநர், மண்டலகலை பண்பாட்டு மையத்தின் வாயிலாக நேரடியாக பெற்று முழுமையாக பூர்த்தி செய்து வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் பரிந்துரைபெற்று உதவி இயக்குநர் மண்டலகலை பண்பாட்டு மையத்தின் வாயிலாக சமர்ப்பிக்கலாம் | உதவி இயக்குநர் /துணை இயக்குநர்கள், மண்டலக் கலை பண்பாட்டு மையம் காஞ்சிபுரம் / மதுரை / தஞ்சாவூர் / சேலம் / திருச்சி மற்றும் துணை இயக்குநர், சென்னை உறுப்பினர் செயலாளர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் பொன்னி, 31, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600 028. தொ .044- 24937471 tneinm@gmail.com
| ஆணையர், (மு.கூ.பொ) கலை பண்பாட்டு இயக்ககம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை– 600 008 தொ.044-28193197 artandculture.tn. gov.in |