| திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி |
நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சி
ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும். இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரை 2024 – 2025 இல் அறிவிக்கப் பட்டது. (அரசாணை (நிலை) எண்.14 சிறப்புத் திட்டச் செயலாக்கத் (திமேக) துறை, நாள் 16 .03 .2024)
| 1,000 மாணவர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) நடத்தும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் | 1.கல்வித்தகுதிக்கான சான்றுகள் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பட்டப்படிப்பு 2. இருப்பிடச் சான்றிதழ், 3. சாதிச் சான்றிதழ் | தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் இணையதளம்
www.naanmudhalvan.
tn.gov.in | திட்ட இயக்குநர், நான் முதல்வன் (போட்டி தேர்வுகள் பிரிவு ) நந்தனம், சென்னை -35 competitiveexams@naanmudhalvan.in
தொலைபேசி: 29813778 |