திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
அரசு சேவை இல்லம்
பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கியுள்ள விதவைகள், ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வளரிளம் பெண்கள், மாற்றுத்திறனுடைய பெண்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் ஆகியோருக்கு பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழில் நுட்பபயிற்சி அளித்தல்.
1. அரசாணை நிலை எண். 1027, பொதுத் துறை, நாள். 30.04.1948 2. அரசாணை நிலை எண். 130, நாள் 16.01.1962 3. அரசாணை நிலை எண். 933, நாள் 18.04.1964 4. அரசாணை நிலை எண். 300, சமூக நலத்துறை, நாள் 15.05.1978 5. அரசாணை நிலை எண். 1787, சமூக நலத்துறை, நாள் 26.6.1984 6. அரசாணை நிலை எண். 2, சமூக நலத்துறை, நாள் 02.01.1977 7. அரசாணை (நிலை) எண்.91, சந (ம) சதி துறை,
நாள் 06.06.2003 | ஆண்டு வருமானம்: ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (மாற்றுத் திறனாளிகள் தவிர) வயது: 14 முதல் 45 வயது வரை) | 1. விண்ணப்பதாரரின் வயதுச் சான்றிதழ் 2. விதவை/ஆதரவற்றவர்/கைவிடப்பட்டவர் / நிராதரவானவர் என்பதற்கான சான்றிதழ் 3. விண்ணப்பதாரர்/ பெற்றோர்/பாதுகாவலரின் வருமானச் சான்றிதழ். 4. மாற்றுத்திறனுடையோர் எனில் அதற்கான சான்றிதழ் அல்லது அதற்கான அத்தாட்சி 5. விதவை எனில் கணவரின் இறப்புச் சான்றிதழ். 6. இறுதியாகப் படித்த வகுப்பின் கல்விச் சான்றிதழ் ஏதேனும் இருப்பின் | சம்மந்தப்பட்ட அலுவலரிடம் நேரடியாக விண்ணப்பிக்கவும் | 1. மாவட்ட சமூகநல அலுவலர்கள் 2.இதர சேவை இல்லங்களின் கண்காணிப்பாளர்கள் 3.விரிவாக்க அலுவலர்கள் (சமூக நலம் 4. Cwo’s | சமூக நல ஆணையரகம், 2 வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை,சென்னை - 600 015. தொலைபேசி எண். 044 – 24351885 மின்னஞ்சல். dswtn2011@gmail.com
|