திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைஉருவாக்கும் திட்டம் (UYEGP)
படித்து வேலை இல்லாதவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே, வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, வேலைவாய்ப்புக்காக கிராமங்களில் இருந்து நகர் புறங்களுக்கு இடம் பெயர்வதை தடுக்கப்படுவதாகும். இத்திட்டத்தின் முக்கிய பயன் என்னவென்றால் மொத்த திட்டமதிப்பில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும்.(அரசாணை எண். 80, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (டி2), நாள். 30.07.2010)”
| 1) வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை 2) சிறப்பு பிரிவினருக்கு 45 வயது வரை 3) ஆண்டு வருமானம் 1.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் 4) 8-ம் வகுப்பு தேர்ச்சி | 1) திட்ட அறிக்கை 2) கல்வி தகுதி சான்றிதழ் 3) இருப்பிட சான்றிதழ் 4) சாதி சான்றிதழ் 5) சிறப்பு பிரிவு சான்றிதழ் | இணையதளம் மூலம் www.kviconline. gov.in/pmegpe portal <http://kvinonline. gov.in/pmegpe portal> | மாவட்ட தொழில் மையங் களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பொது மேலாளர்கள் ,சென்னை மாவட்டத்திற்கு மண்டல இணை இயக்குநர், சென்னை | தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அலுவலகம், 2வது தளம், சிட்கோ வணிக வளாகம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32. தொலைபேசி எண்: 044 - 22505011, 044 - 22502018 மின்னஞ்சல் முகவரி: indcomchn@gmail.com
இணையதள முகவரி: www.msmeonline.tn. gov.in |