திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதி – தொடக்கம்
பால் வழங்கி வரும் உறுப்பினர்கள் விபத்து காரணமாக மரணம் அடைந்தால், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் / சங்கத்திற்கு தொடர்ந்து பால் ஊற்றுவதை ஊக்குவிப்பதற்காக, இழப்பீட்டுத் தொகையாக ரூ.2,50,000/- திருமண உதவித்தொகையாக ரூ.30,000/- (ஒரு பெண் குழந்தை மட்டும்), கல்வி உதவித் தொகையாக ரூ.25,000/- (தலா 2 குழந்தைகள்), மற்றும் அனைத்து வகை இறப்புகளுக்கும், ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.5,000/- வழங்கப்படும். மேலும் விபத்தில் ஒரு கை, கால், கண் இழக்க நேரிட்டால் ரூ.75,000/-மும், இரண்டு கைகள், கால்கள் மற்றும் கண்கள் இழக்க நேரிட்டால் ரூ.1,75,000/- வழங்கப்படும். அரசாணை (நிலை) எண்.63, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை, நாள் 28.04.2010.
| 1. பால் ஊற்றும் உறுப்பினர் மரணமடைவதற்கு முன் கடைசி ஓராண்டில் 180 நாட்கள் மற்றும் 120 லிட்டர் பாலினை வழங்கியிருக்க வேண்டும். 2. மாதந்தோறும் இந்நலநிதிக்காக சந்தாத் தொகை ரூ.1/- உறுப்பினர் சந்தாவாகவும், 0.50 பைசா சங்க பங்களிப்பாகவும் மற்றும் 0.50 பைசா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பங்களிப்பாகவும் இந்நலநிதியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும். 3. இறந்த உறுப்பினரின் வாரிசு தாரர்கள் தொடர்ந்து சங்கத்திற்கு பால் வழங்க வேண்டும். | 1. இந்நலநிதி கோரிய விண்ணப்ப படிவம்-3 2. விபத்து மூலமாக இறப்பு எனில், · முதல் தகவல் அறிக்கை · உடற்கூறு ஆய்வு சான்றிதழ் · இறப்பு சான்றிதழ் · வாரிசு சான்றிதழ் 3. கல்வி உதவித் தொகைக்கு பயின்று வரும் பள்ளிச்சான்றிதழ் (Bonafide Certificate) மற்றும் கல்வி உதவித் தொகை கோரிய விண்ணப்பம் (படிவம்-5). 4. உதவித் தொகைக்கு உதவி கோரிய விண்ணப்பப் படிவம்-5 5. காயம் அடைந்தவர் எனில், சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்துவரின் அறிக்கை, 6. இயற்கை மரணம் எனில், a. இறப்பு சான்றிதழ் b. வாரிசு சான்றிதழ் வங்கி கணக்கு விவரங்கள் | தொடர்புடைய மாவட்ட துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் | தொடர்புடைய மாவட்ட துணைப் பதிவாளர் (பால்வளம்) | பால்வளத் துறை ஆணையர் பால்வளத் துறை அலுவலகம், சென்னை-51/044-25555193, 194, 195/ dddgovsocieties@ gmail.com and dddgov2@gmail.com |