முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைத்தீர்ப்பு மேலாண்மை திட்டம் (IIPGCMS CM Helpline) - இத்திட்டத்தில், மக்கள் தங்கள் குறைகளைச் சமர்ப்பிக்கவும், அவற்றை எளிதாக தீர்த்துக்கொள்ளவும் இரு வழித்தகவல் தொடர்புத்தளமாக விளங்கும். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட இந்த குறை தீர்க்கும் திட்டத்தை, தமிழ் நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.
அதி நவீன கட்டுப்பாட்டு அரை கொண்ட முதலமைச்சரின் உதவி மையத்தில், பின்வரும் சேவைகள் வழியே வரும் புகார்கள் மற்றும் மனுக்களை ஒருங்கிணைத்து, அவைகளை பூர்த்தி செய்யும்:
- உதவி மையம் எண் 1100
- இணையதளம் cmhelpline.tnega.org
- கைபேசி செயலி (CMHelpline Citizen - கூகுள் பிளேஸ்டோர் & ஆன்டராய்டு – Android & iOS)
- cmhelpline@tn.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல்
- சமூக ஊடகம்: https://twitter.com/CMHelplineTN; https://www.facebook.com/CMHelplineTN
கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்காக, சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும். மேலும், அவர்களே குறையின் நிலையை தெரிந்து கொள்வதற்கும் இத்திட்டத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம், மாநிலத்தில் மக்கள் எங்கு இருந்தாலும், எந்த ஒரு தடையுமின்றி அவர்களுக்கு உரிய அரசு சேவைகள், திட்டங்கள் மற்றும் உதவிகள் பெற்று பயனடைய செயல்படுத்தப்படுகிறது.
மக்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைகள் கூறுவது மட்டுமன்றி, அரசிடம் கேள்வி எழுப்பவும், அரசு திட்டங்களை மேம்படுத்த அவர்களின் மேலான கருத்துக்களை தெரிவிப்பதற்கும், முதலமைச்சரின் அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், பதில் அளிப்பதற்கும், இதற்குள் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறைகளை துரிதமாகவும், நியாயமாகவும், பரிவுடனும், மக்களுக்கு எந்த ஒரு அதிருப்தி இல்லாமல் நிவர்த்தி செய்வதற்காக இத்திட்டத்தில் விதிமுறைகள் உள்ளன. மக்களின் குறைகள் மீது விரைந்தும், திறம்படவும் செயலாற்ற அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைத்தீர்ப்பு மேலாண்மை திட்டம் (IIPGCMS CM Helpline) வாயிலாக தமிழக அரசு ஒரு பொறுப்பான அரசின் 7 கொள்கைகளை அடைய பாடுபடும். அவை: அணுக்கம், பங்கு, தொடர்பு, பதிலளிப்பு, செயல்திறன் மற்றும் பொறுப்புடைமை.
இந்த திட்டதை பற்றிய கேள்விகளுக்கு எமது கேள்வி பதில்கள் பகுதியை காணவும்.