திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கானசேர்க்கையில் முன்னுரிமை அடிப்படையில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அளித்தல்
. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரைமாணாக்கர்கள் அரசுப்பள்ளிகளில் பயின்று பொறியியல், வேளாண்மை, கால்நடைமருத்துவம், மீன்வளம் மற்றும் சட்டம் ஆகிய பட்டப்படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கைபெறும் மாணக்கர்களுக்கு வழங்கப்படுகிறது. (அரசாணை (நிலை) எண்.167, உயர்கல்வி (ஜே2) துறை, நாள் 31.08.2021). (அரசானை(நிலை) எண்.221, உயர்கல்வி (ஜே2) துறை, நாள் 15.11.2021). | 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணாக்கர்கள் அரசுப் பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும் மற்றும் பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் சட்டம் ஆகிய பட்டப்படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதிகளை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு 7.5 % முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படும். அரசு பள்ளிகளில் படித்து 7.5 % முன்னுரிமை அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் மாணாக்கர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவினங்களான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங் களையும் அரசே வழங்கும். | பள்ளி தலைமை ஆசிரியரின், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்றதற்கான சான்று | மாணாக்கர்கள் அவர்கள் பயிலும் கல்லூரியில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அந்த கல்லூரி முதல்வர்கள் சம்மந்தப்பட்ட இணையதளம் வாயிலாக தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். | தொடர்பு அலுவலர், தொழில் நுட்பக் கல்வி இயக்கம், சென்னை-25 | தொழில்நுட்ப கல்வி இயக்ககம், சர்தார் வல்லபாய் பட்டேல் ரோடு, கிண்டி, சென்னை-25 தொலைபேசி எண். 04422350525, 22351018 மின்னஞ்சல் முகவரி. tndote@gmail.com இணையதளம். https://dte.tn.gov.in
|