திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் (அரசாணை எண்./ அரசு கடித எண்,) | உதவி பெறுவதற்குரிய தகுதிகள் | மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் | விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) | தொடர்பு அலுவலரின் பதவி | துறைத் தலைமை தொலைபேசி எண்/ மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி |
ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டம் திட்டக்கூறு -1 :வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டம்.
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர்
மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பெற்றோருடன் தங்கி 9
மற்றும் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3500/-ம் விடுதியில் தங்கி 9
மற்றும் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7000/-மும்
வழங்கப்படும். | அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதி திராவிடர் மாணாக்கர்களுக்கு மட்டும். பெற்றோர் / பாதுகாவலர் ஆண்டு வருமான வரம்பு ஆதி திராவிடர் மாணாக்கர்களுக்கு ரூ.2.50 இலட்சம் | வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ் | இணையதளம் மூலம் tnadtwscholarship.tn.gov.in
| பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் | இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்ககம், சென்னை-600 005. மின்னஞ்சல்
044-2859 4780 dir-sur@tn.gov.in |
திட்டக்கூறு-2 :
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு
வரை பயிலும் சுகாதார தொழில் புரிவோரின்
குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம். சுகாதாரமற்ற தொழில்
புரிவோரின் குழந்தைகளுக்கு இக்கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் மனித
கழிவு அகற்றுவோர் சட்டம்-2013 பிரிவு 2(1) (g)-ன் படி மனித கழிவை அகற்றுவதாக
வரையறுக்கப்பட்ட நபர்கள் / தோல் உரிப்பவல் / தோல் பதனிடுபவர் / குப்பை பொறுக்குபவர்
/ மனித கழிவு அகற்றுவோர் சட்டம் 2013 பிரிவு 2(1)(d)ன் படி சுகாதார கேடு விளைவிக்க
வல்ல துப்புரவு பணியை மேற்கொள்வதாக வரையறுக்கப்பட்ட நபர்களின் குழந்தைகளுக்கு
சாதி, மத, வருமானவேறுபாடின்றி இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இக்கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பெற்றோருடன்
தங்கி 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணக்கர்களுக்கு ஆண்டுக்க ரூ-3500/-
விடுதியில் தங்கி 3ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணக்கர்களுக்கு
ஆண்டுக்கு ரூ.8000/- வழங்கப்படும்.
| அஅங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 1 முதல்
10-ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணாக்கர்கள்
சாதி, இனம் கணக்கின்றி அனைத்து
பிரிவினருக்கும் பொருந்தும்.
பெற்றோரில் யாரேனும் ஒருவர் துப்புரவு பணி, தோல் பதனிடுதல், தோல் உரித்தல்
மற்றும் கழிவு பொருட்களிலிருந்து மறுசுழற்சிக்கு உகந்த பொருட்களை பிரித்து
சேகரிக்கும் தொழில் ஈடுபட்டிருக்க வேண்டும்
| துப்புரவு பணி புரிவதற்கான சான்றிதழ் உரிய அலுவலரிடம் பெற்றிருக்க வேண்டும். | இணையதளம் மூலம் த்துறை tnadtwscholarship.tn.gov.in
| பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் | இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்ககம், சென்னை-600 005. மின்னஞ்சல் 044-2859 4780 |