அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள்

அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள்

1. முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய மக்கள் குறை தீர்ப்பு மேலாண் அமைப்பின் முக்கிய நோக்கம் என்ன ?

ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய முதலமைச்சரின் குறைதீர்க்கும் மேலாண் அமைப்பு (IIPGCMS) (CM Helpline) இது மக்கள் சேவைக்கான இரு வழித்தளம். அவர்களது வசதிக்கு ஏற்ப இருப்பிடத்தில் இருந்தப்படியே குறைகளை பதிவிடவும் தீர்வு கண்டிடவும் இயலும். மனுதாரர் அவர்கள்,
  1. குறை(கள்) எந்த நேரத்திலும் எச்சூழ்நிலையிலும் பதிவு செய்யலாம்.
  2. குறை(கள்) நிலையை அறிந்துக் கொள்ளலாம்.
  3. கேள்விகளை எழுப்பலாம் .
  4. இத்திட்டத்தை மேம்படுத்த கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
  5. முதல்வரின் பொது அறிக்கைகளையும் காணலாம்.
இச்சேவையை பெருமளவில் பயன்படுத்தும் பொருட்டு பல்வேறு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.அவையானவை - கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு எண் -1100, இணையதள சேவை, அலைபேசி செயலி, மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் வழி சேவையாகும் . மேற்காணும் சேவைகள் வழியாக பதிவு செய்யப்படும் குறைகள் யாவும் அழைப்பு மையம் வழியே சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுப்புதல் மற்றும் தொடர்ந்து கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்களின் குறைகளை களைந்திட ஒருங்கிணைந்து செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


2. எவ்வகையான குறைகளை இங்கு பதிவு செய்யாலாம் ?

பின்வருபவை போன்ற குறைகளை பதிவு செய்யலாம்,
  1. அரசு நலத்திட்டங்கள் அல்லது உதவிகளை பெறுவதற்கு தகுதிகள் இருந்தும் அதனை பெறுவதில் தடைகள் இருப்பின்.
  2. குடிமக்கள் தொடர்பான பிரச்சினைகள் – அரசு மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் நேருதல், தெரு விளக்கு, கால்வாய் அடைப்பு, தண்ணீர் தேங்குதல் உள்ளிட்டவற்றை குறித்தும் புகார் தெரிவிக்கலாம்.
  3. இதர பொது பிரச்சினைகள்.


3. நான் எவ்வாறு குறைகளை இணையத்தில் சமர்ப்பிப்பது ?

பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்கவும்,

  1. இணையத்தில் தங்களது அலைபேசி எண்/ மின்னஞ்சல் முகவரி வாயிலாக பதிவு பெறவும் .
  2. அலைபேசியில் பெறப்பட்ட ஒரு முறை கடவுச் சொல்லை பயன்படுத்தி இணையத்தில் உள்நுழையவும் .
  3. குறைகளை பதிவிட “ மனு செய்ய ”எனும் பொத்தானை தொடவும்.
  4. தங்கள் கோரிக்கை குறித்து தெரிந்த தகவல்களை விவரித்து படிவத்தினை பூர்த்தி செய்யவும்.
  5. பின்னர் தொடு திரையில் “சமர்ப்பி” எனும் பொத்தானை தொடவும் .
  6. தங்களின் குறை உரிய அலுவலர்களுக்கு ஒன்றிணைக்கப்படுவதுடன் , குறையின் நிலை குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.

4. எந்த மொழியில் நான் குறைகளை சமர்ப்பிக்கலாம் ?

நீங்கள் குறைகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமர்ப்பிக்கலாம்.


5. குறைகளை பதிவு செய்யும்போது சம்மந்தப்பட்ட துறை எனக்கு தெரியாவிடில் நான் என்ன செய்வது ?

தங்களுக்கு சரியான துறையை தேர்ந்தெடுக்க இயலவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் - 1100 வழியே உதவி மையத்தை அணுகவும், உதவி மைய அலுவலர் தங்களின் படிவத்தைப்பூர்த்தி செய்ய உதவுவார்.


6. வேறு எவ்வகையில் எனது குறைகளை பதிவு செய்யலாம் ?

  1. கைபேசி செயலி –ஆன்ட்ராய்டு / நவீன நுண்ணறிவுப் பேசி இயக்குதளம்( IOS).
  2. உதவி மைய எண்-1100-யை அழைக்கலாம்.
  3. cmhelpline@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறைகளை அனுப்பலாம் .
  4. வலைதளப் பக்கத்தின் கடைசியில் இருக்கும் “ எங்களை தொடர்பு கொள்ள" என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
  5. "எங்களை தொடர்பு கொள்ள" என்ற முகவரிக்கு அணுகலாம்.
  6. முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் .
  7. அருகாமையில் உள்ள பொது சேவை மையத்தை(csc) அணுகலாம் (இந்த சேவை மையம் விரைவில் துவங்கப்பட உள்ளது).

7. அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக குறைகளை பதிவு செய்ய இயலுமா ?

ஆம். அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக குறைகளை பதிவு செய்யலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைக் காண( வேறு எவ்வகையில் எனது குறைகளை பதிவு செய்யலாம்) பதிவை காணவும்.


8. திறன்பேசி இல்லை என்றால் நான் குறைகளை பதிவு செய்ய இயலுமா ?

ஆம். திறன் பேசி இல்லையென்றாலும் குறைகளை பதிவு செய்ய இயலும் . எந்தவொரு இணையவழி சேவையைக் கொண்ட கணினி வாயிலாக தங்கள் குறைகளை பதிவிடலாம். மேலும் குறைகளை பதிவு செய்ய இணைய இணைப்பு இல்லாத வழிமுறைகளையும் பின்பற்றலாம் . அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைக் காண( நான் எவ்வாறு குறைகளை இணையத்தில் சமர்ப்பிப்பது ) பதிவை காணவும்.


9. நான் ஏன் இணையதளத்தில் / கைபேசி செயலியில் உள்நுழைய வேண்டும்?

உபயோகிப்பவரின் மெய்த்தன்மையையும், குறைகளையும் நாங்கள் சரிபார்ப்பது அவசியமாகிறது.

இது தங்களுக்கு தனிப்பட்ட அடையாளத்தை அளிக்கிறது. ஆதலால், தாங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே குறைகளை கண்காணிக்கவும் அதன் நிலையினை அறிந்திடவும் இயலும்.

10. இணையத்தில் உள்நுழைய இயலவில்லை என்றால் நான் என்ன செய்ய வேண்டும் ?

உங்கள் உள்நுழைவுச் சான்றுகள் சரியானவையா என்பதை உறுதிப்படுத்தவும் .

சரியானவையாக இருந்தும் உள்நுழைய இயலாவிட்டால் Cmhelplinelogin@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அளிக்கலாம் .உங்கள் கடவுச் சொல்லை மறந்துவிட்டீர்கள் என்பதில் பிரச்சனை என்றால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை பார்க்கவும் (“எனது உள்நுழைவு கடவுச்சொல்லை மறந்துவிட்டேன் நான் என்ன செய்ய வேண்டும்“).

இதனிடையே, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி உங்கள் குறைகளை பதிவு செய்யலாம் (வேறு எவ்வகையில் எனது குறைகளை பதிவு செய்யலாம்) பதிவையும் காணலாம்.

11. எனது உள்நுழைவு கடவுச்சொல்லை மறந்துவிட்டேன் நான் என்ன செய்ய வேண்டும்..?

தங்கள் கைபேசி எண்ணை கொண்டு உள்நுழைந்தால் கடவுச்சொல் தேவையில்லை. மாறாக, கைபேசிக்கு வரப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை பயன்படுத்தினால் தாங்கள் வெற்றிகரமாக வலைதளத்தில் உள்நுழைய முடியும் .


12. எனது கைபேசிக்கு கடவுச்சொல் வரவில்லை என்றால் என்ன செய்வது ? 

உங்கள் குறைகளை பதிவு செய்தப்பின் 60 வினாடிகளுக்குள் "ஒருமுறை கடவுச்சொல்" கைபேசிக்கு வரவில்லை என்றால், திரையில் “மீண்டும் அனுப்பு” என்ற இணைப்பினை செயல்படுத்தினால் மீண்டும் ஒரு முறை கடவுச்சொல்லை பெறலாம்.

எந்த வகையான செயல்பாடும் பயனளிக்கவில்லை என்றால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் பட்டியலிடப்பட்டுள்ள எங்களது பிறவழி சேவைகளை பயன்படுத்தலாம் (வேறு எவ்வகையில் எனது குறைகளை பதிவு செய்யலாம்). மேலும், தொழில்நுட்ப சிக்கல் குறித்து cmhelpline@tn.gov.in     எனும் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

13. இறுதியாக நான் குறைகளை பதிவு செய்தபின் தொலைபேசி எண் மாற்றப்பட்டால் என்ன செய்வது ?

புதிய எண்ணை பயன்படுத்தி குறைகளை பதிவு செய்யலாம், இருப்பினும் வலைதள திரையில் முன்னர் பதிவு செய்த குறைகள் குறித்து எவ்வித தகவல்களையும் காண இயலாது. மாறாக, கட்டணமில்லா தொலைபேசி 1100 –வில் தொடர்புக் கொண்டு குறைக்கான அடையாள குறியீடு அல்லது முந்தைய தொலைபேசி எண்ணை தெரிவித்து குறையின் நிலையினை அறிந்துக் கொள்ளலாம்.

14. குறைகளுக்கான ஆவண ஆதாரங்கள் /புகைப்படங்கள் /காணொளிகளை இணைக்க முடியுமா ? 

ஆம், 20 MB அளவுவரை முழுவதுமாக இணைக்கலாம்.


15. குறைகளை பதிவு செய்ய குறைதீர்க்கும் மையத்திற்கு கட்டாயம் வரவேண்டுமா ?

இல்லை . நீங்கள் பின்வரும் முறைகளின் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
  1. முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய மக்கள் குறை தீர்ப்பு மேலாண் அமைப்பு (IIPGCMS).
  2. முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய மக்கள் குறை தீர்ப்பு மேலாண் அமைப்பு (IIPGCMS) - தொலைபேசி செயலி.
  3. கட்டணமில்லா தொலைபேசி எண் 1100-யை அழைக்கலாம்.
  4. cmhelpline@tn.gov.in எனும் மின்னஞ்சல் மூலம் குறைகளை பதிவு செய்யலாம்.
  5. இணையதள  பக்கத்தின் கடைசியில் இருக்கும்  “எங்களை தொடர்பு கொள்“ என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
  6. முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் தொடர்புக்கொள்ளலாம் .
  7. அருகாமையில் உள்ள பொது சேவை மையத்தை(csc) அணுகலாம் (இந்த சேவை மையம் விரைவில் துவங்கப்பட உள்ளது).

16. எப்பொழுதெல்லாம் உதவி எண்ணை அழைக்கலாம்?

அரசு விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உதவி எண்கள் செயல்படும்.

17. என் குறைகள் எத்தனை நாட்களுக்குள் தீர்வு காணப்படும் ?

ஒவ்வொரு துறைக்கும் குறைகளின் மீது தீர்வுக்கான சேவை நிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தீர்வுகாணப்படும்.


18. ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய முதலமைச்சரின் குறைதீர்க்கும் மேலாண்மை திட்டத்தின் உதவி மையக் குழு குடிமக்களின் குறைகளை தீர்க்க பின்பற்றும் வழிமுறைகள் யாது ?

குறைகளை வெற்றிகரமாக சமர்ப்பித்தவுடன் கணினியால் ஒப்புதல் உருவாக்கப்பட்டு கைபேசிக்கு குருஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும் . அது போன்றே வலைத்தளத்தில் உள்நுழைவு செய்யும்போதும், நிறைவு செய்யும்போதும் குறுஞ்செய்தி வாயிலாக ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், முகப்பு பெட்டி (DASHBOARD) பகுதிக்கு சென்று குறைகளை கண்காணித்திட முடியும்.

19. நான் எவ்வாறு முன்னர் பதிவு செய்த குறையை பின் தொடர்வது?

குறைகளை கண்காணிக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும் :

  1. "வலைதளத்தில் உள்நுழைக", “என் மனுக்கள்” (My Dashboard) என்ற பகுதிக்கு செல்லவும்.
  2. அங்கு சமர்பித்த கடந்த கால குறைகளின் பட்டியலை காண்பீர்கள் .
  3. குறைகளின் நிலையறிய நிலைகாட்டியை வைத்து குறிப்பிட்டு குறைகளின் மீது தொடுக.
  4. இது தவிர நீங்கள் குறைகளை வெற்றிகரமாக சமர்ப்பித்தவுடன் கைபேசிக்கு குறுஞ்செய்தி வாயிலாக ஒப்புதல் வரப்பெறும்.

20. இந்த இணையம் / செயலில் சமர்பிக்கப்பட்ட குறைகளை என்னால் வேறு எவ்வகையிலும் கண்காணிக்க முடியுமா ?

இந்த இணையம் அல்லது செயலியில் பதியப்பட்ட குறைகளை வேறுவகையில் கண்காணிக்க வழிவகை இல்லை. எனினும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 சேவை வழியே உதவி மையத்தை தொடர்புக் கொண்டு உங்களது குறையின் நிலையை கேட்டு அறியலாம்.

21. இந்த இணையத்தில் செயல்படும்போது “ தவறு “ என திரையில் காட்சி வரபெற்றாலோ அல்லது பதிலளிப்பது நின்றுவிட்டாலோ என்ன செய்யவேண்டும் ?  

பின் வரும் குறிப்புகளை முயற்சிசெய்யவும்,
  1. உலாவியை புதுப்பிக்கவும் ( Refresh the browser).
  2. இணையத்தில் இருந்து வெளிவந்து மீண்டும் உள்நுழையவும்.
  3. வேறு உலாவியில் முயற்சிக்கவும்.
  4. இணையதள இணைப்பு செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யவும்.
  5. இவை ஏதும் செயல்படவில்லை எனில் cmhelpline@tn.gov.in எனும் இணையதள முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


22. கேள்வி பட்டியலில் விளக்கப்படாத கேள்வி என்னிடம் இருந்தால் என்ன செய்யவேண்டும் ?

எங்கள் இணையத்தில் உள்ள “கருத்து சொல்ல“ எனும் பகுதியை பார்வையிடவும், இதில் தங்கள் கேள்வியை அனுப்பவும் . இதற்கான பதில்கள் “என் மனுக்கள்” (My Dashboard) பகுதியில் கிடைக்கும். அவ்வாறு தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றால் உதவி மைய எண் 1100 –யை தொடர்புக் கொள்ளவும் அல்லது திரையின் அடித்தளத்தில் தோன்றும் “எங்களை தொடர்பு கொள்ள” என்ற முகவரிக்கு வருகைத் தரவும் .